/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து ஊழியர்களுக்கு நவீன ஓய்வறை
/
போக்குவரத்து ஊழியர்களுக்கு நவீன ஓய்வறை
ADDED : ஜன 09, 2024 12:29 AM
திருவொற்றியூர்,எண்ணுார் போக்குவரத்து ஊழியர்களுக்கு, 3 லட்ச ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்ட நவீன ஓய்வறையை, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து, எண்ணுார் பணிமனையில், 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வளாகத்தில் ஓய்வறை உள்ளது.
அந்த ஓய்வறை பழுதடைந்திருப்பதால், புதுப்பித்து தர வேண்டும் என, போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து, 3 லட்ச ரூபாய் செலவில், ஓய்வறை புதுப்பிக்கப்பட்டது.
முழுதும், குளிரூட்டப்பட்ட நவீன ஓய்வறையை, நேற்று காலை திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் கோமதி மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.