/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்
/
புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்
புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்
புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்
ADDED : ஜன 11, 2025 12:18 AM
'பாட்டினைப்போல் ஆச்சர்யம்' எனும் தலைப்பில், முனைவர் ராசேந்திரன் பேசியதாவது:
அனைத்து துறையிலும் ரோபோக்கள் வந்துவிட்டன. நாளைய உலகில், எது ரோபோ, எது மனிதன் என்று கண்டுபிடிக்க, புத்தகங்கள் மட்டுமே உதவும்.
ஏனென்றால், ரோபோக்கள் புத்தகங்கள் படிக்காது. நவீன விஞ்ஞானம் கைப்பற்ற முடியாத பொருளாக புத்தகங்கள் மட்டுமே உள்ளன.
பாரதியின் பாடல்களில் குயில் பாட்டு மிகவும் கவனத்திற்குரியது. அதில் பாரதி எழுதியுள்ள, 'காதல் போயின் சாதல்' என்ற வரிகள், மிக ஆழமான கருத்துள்ளவை.
ஒரு மொழியை ஒலியாகி, அந்த ஒலி வடிவமாகி, ஒரு பொருளைத் தரும்படி பாடலாக மாறுவது எத்தனை ஆச்சர்யம்?
அதனால்தான், பாட்டினைப்போல் ஆச்சர்யம் இந்த உலகில் இல்லை என்றார் பாரதி. அந்தப் பாட்டினை நமக்குத் தருவது புத்தகங்கள்தான். எனவே, புத்தகங்களைப் போல் ஆச்சர்யம் உலகில் ஏதுமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.