தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம்

ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம்

ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம்


ADDED : நவ 20, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் வரும், 28 முதல் டிச., 4 வரை, நகர்ப்புற சமுதாய நல மையங்களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

மாநகராட்சி சார்பில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள், வரும், 28ம் தேதி முதல் டிச., 4 வரை, 15 மண்டலங்களில் உள்ள, நகர்ப்புற சமுதாய நல மையங்களில், காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற உள்ளது.

கத்தி உபயோகப்படுத்தாமல், தையல், தழும்பு இல்லாமல், புதிய எளிய முறையில் செய்யப்படுவதால், மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம்.

நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு, அரசு வழங்கும் ஊக்கத்தொகை, 1,100 ரூபாய்; அழைத்து வருவோருக்கு, 200 ரூபாய் வழங்கப்படும். மனைவியின் நலம் காக்க ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால், கருத்தடை சிறப்பு முகாம் என்ற அரிய வாய்ப்பை, ஆண்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us