/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு எம்.ஜி.எம்.,மில் நவீன சிகிச்சை
/
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு எம்.ஜி.எம்.,மில் நவீன சிகிச்சை
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு எம்.ஜி.எம்.,மில் நவீன சிகிச்சை
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு எம்.ஜி.எம்.,மில் நவீன சிகிச்சை
ADDED : பிப் 20, 2025 02:50 AM
சென்னை, புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு, உள்ளுறுப்பை தள்ளி வைக்கும் மாற்று சிகிச்சை செய்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
மருத்துவமனையின் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அனில் வைத்யா கூறியதாவது:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 58 வயது பெண் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு, 'சூடோமைக்ஸோமா பெரிடோனி' என்ற புற்றுநோய், குடல்வால் பகுதியில் தோன்றி, வளர்ச்சியடைந்த புற்றுநோய் பாதிப்பாக கண்டறியப்பட்டது. இவை, பிற உறுப்புகளுக்கு பரவி, கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட்டு வந்தது.
எனவே, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செந்தில் முத்துராமன், சிவகுமார் மகாலிங்கம் ஆகியோருடன் இணைந்து, அப்பெண்ணிற்கு, புற்றுநோய் பாதித்த கல்லீரல் போன்ற உறுப்புகள் அகற்றப்படாமல், அதேநேரம் சற்று தள்ளி மாற்றி வைத்து, சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது.
மாற்றி அமைக்கப்பட்ட உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நோயாளி இயல்பு நிலையை திரும்பியது உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற, அறுவை சிகிச்சை செய்ய இயலாத புற்றுநோய்க்கு, மாற்றியமைக்கப்பட்ட உள்ளுறுப்பு மாற்று சிகிச்சை, ஆசியாவில் முதல் முறையாக, இங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.