/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மோடி' கோப்பை கால்பந்து போட்டி இருபாலரிலும் 24 அணிகள் மோதல்
/
'மோடி' கோப்பை கால்பந்து போட்டி இருபாலரிலும் 24 அணிகள் மோதல்
'மோடி' கோப்பை கால்பந்து போட்டி இருபாலரிலும் 24 அணிகள் மோதல்
'மோடி' கோப்பை கால்பந்து போட்டி இருபாலரிலும் 24 அணிகள் மோதல்
ADDED : ஆக 18, 2025 02:41 AM

சென்னை:கல்லுாரிகளுக்கு இடையிலான 'மோடி' கோப்பை தென்மாநில கால்பந்து போட்டியில், ஆண்களில் 16 அணிகள், பெண்களில் எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, 'மோடி' கோப்பை தென்மாநில கால்பந்து போட்டியை நடத்துகின்றன.
கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டி, செங்கல்பட்டு, எப்.சி., மைதானத்தில் நடந்து வருகிறது. ஆண்களில் 16 அணிகள், பெண்களில் எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆண்களுக்கான நேற்றைய, 'நாக் அவுட்' சுற்றில், கேரளா ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி, 6 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை ஜேப்பியார் அணியையும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 8 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை செயின்ட் ஜோசப் அணியையும் தோற்கடித்தன.
மற்ற போட்டிகளில், மூணார் அரசு கல்லுாரி, 4 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை நியூ கல்லுாரியையும், திருச்சி செயின்ட் ஜோசப் அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் மார் அதானசியஸ் அணியையும் வீழ்த்தின.
கேரளாவின் எம்.இ.எஸ்., கல்லடி அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில், தமிழ்நாடு உடற்கல்வியியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.