ADDED : பிப் 04, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், திருமங்கலம், பாடி குப்பத்தை சேர்ந்தவர் வினோத் குமார், 32; பெயின்டர். இவர், திருவேற்காட்டில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு, 12:30 மணியளவில், திருமங்கலம், ரயில் நகர் அருகே நடந்து சென்றார்.
மது போதையில் இருந்த வினோத்குமாரை, இருவர் வழிமறித்து, கூவம் அருகே இருந்த இருட்டு பகுதியில் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு, அவரை சரமாரியாக தாக்கி, கத்தி முனையில், 4,000 ரூபாய், 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து தப்பினர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.