/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஞ்சு மிட்டாய் விற்பனை மெரினாவில் கண்காணிப்பு
/
பஞ்சு மிட்டாய் விற்பனை மெரினாவில் கண்காணிப்பு
ADDED : பிப் 22, 2024 12:47 AM
மெரினா, தடை விதிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறதா என, மெரினா கடற்கரையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில், குழந்தைகளை கவரும் விதமாக,'பிங்க்' நிற பஞ்சு மிட்டாய் விற்கப்பட்டு வந்தது.
இதில், புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது தெரிந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் மெரினா கடற்கரையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுபோன்ற பஞ்சு மிட்டாய் விற்றால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு துணையாக, மெரினாவில் இதுபோன்ற பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறதா என, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.