/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
/
தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
ADDED : மார் 10, 2024 12:14 AM
பறக்கும் படை வாகனங்களில்
'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு
சென்னை மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, பார்க்கும் குழு, கணக்கியல் குழு ஆகியவற்றிற்கு, தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 496 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநகராட்சி கூடுதல் கமிஷனரும், மாவட்ட தேர்தல் கூடுதல் அலுவலருமான லலிதா விளக்கினார்.
லலிதா கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனை தீவிரப்படுத்தப்படும். இந்த தேர்தலில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து வரப்பட்டால், உடனடியாக ரிப்போர்ட் செய்ய, இ.எஸ்.எம்.எஸ்., என்ற இணையபதிவு துவங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு வாகனங்களிலும் புதிதாக, 'கண்காணிப்பு கேமரா' பொருத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, வீடியோ பதிவு செய்பவருடன், வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.
பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், சோதனை பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

