sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் 'சாம்பியன்'

/

எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் 'சாம்பியன்'

எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் 'சாம்பியன்'

எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் 'சாம்பியன்'


ADDED : பிப் 09, 2025 10:09 PM

Google News

ADDED : பிப் 09, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, கோயம்பேடில் இயங்கி வரும் செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகள் இடையிலான பெண்கள் பிரிவு கூடைப்பந்து போட்டி, கடந்த 5 முதல் 8ம் தேதி வரை நடந்தது.

இப்போட்டியில், ராணிமேரி, நியூ பிரின்ஸ், எம்.ஓ.பி., வைஷ்ணவா, எத்திராஜ், எஸ்.ஆர்.எம்., நசரேத் உட்பட 14 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடந்தன.

இதில், துவக்கம் முதலே ஒவ்வொரு போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி வீராங்கனையர், அரையிறுதியில் ராஜேஸ்வரி கல்லுாரி அணியை 67 - 17 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்றனர்.

பின், இறுதி போட்டியில் எத்திராஜ் கல்லுாரி அணியை எதிர்கொண்ட எம்.ஓ.பி., அணி வீராங்கனையர், 78 - 48 என்ற புள்ளிக்கணக்கில் இந்த ஆட்டத்தையும் வென்று, கோப்பையை தங்கள் வசப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us