/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருணாநிதி நினைவிடம் உட்பட இரு இடங்களில் 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மறியல்! ஸ்தம்பித்த போக்குவரத்தால் தவித்த வாகன ஓட்டிகள்

UPDATED : டிச 13, 2025 08:02 AM
ADDED : டிச 13, 2025 05:18 AM

சென்னை: சென்னையில், தலைமைச் செயலகம் மற்றும் கருணாநிதி நினைவிடம் அருகே துாய்மை பணியாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்தனர்.
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும், கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். பின் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா, உழைப்பாளர் சிலை, மெரினா கடலில் இறங்கி போராட்டம் என, அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை மெரினா, காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகேயும், தலைமைச் செயலகம் அருகேயும் சாலையில் படுத்து, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாசதுக்கம் மற்றும் கோட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, குண்டுக்கட்டாக துாக்கி, பேருந்தில் ஏற்றினர். அவர்கள், ஆலந்துார் காமராஜர் திருமண மண்டபம், ஆதம்பாக்கம் சரோஜினி மஹால், மடிப்பாக்கம் விஜயலட்சுமி மஹால், ராயபுரம் சூரங்குடி நாடார் மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர். துாய்மை பணியாளர்களின் சாலை மறியல் போராட்டத்தால், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், வாகன ஓட்டிகள் தவித்தனர்.