/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல் லாரி டயரில் சிக்கி தாயும், மகளும் பரிதாப பலி
/
செங்கல் லாரி டயரில் சிக்கி தாயும், மகளும் பரிதாப பலி
செங்கல் லாரி டயரில் சிக்கி தாயும், மகளும் பரிதாப பலி
செங்கல் லாரி டயரில் சிக்கி தாயும், மகளும் பரிதாப பலி
ADDED : மார் 11, 2026 05:56 AM

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் பகுதியில், தாய், மகள் சென்ற ஸ்கூட்டர் மீது, செங்கல் லோடு லாரி மோதியது. இதில் தடுமாறி விழுந்த இருவரும், லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
பெரும்பாக்கம், சேகரன் நகரைச் சேர்ந்தவர் புனீஷ், 38, மனைவி லாவண்யா, 35. தம்பதி, ஐ.டி., துறை ஊழியர்கள். இவர்களது மகள் இனியா, 13, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி.
நேற்று காலை, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் மகளை ஏற்றிய லாவண்யா, பள்ளி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். பெரும்பாக்கம் 'பொலினி ஹில்ஸ்' குடியிருப்பின் பிரதான சாலையில் சென்றபோது, காலை 7:40 மணியளவில், பின்னால் வந்த செங்கல் லோடு லாரி, ஸ்கூட்டரின் மீது மோதியது.
வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், இருவரும் செங்கல் லாரியின் அடியில் சிக்கினர். கண் இமைக்கும் நேரத்தில் லாரி டயரில் சிக்கி, தாயும், மகளும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ஓட்டுநர், லாரியை நிறுத்தி, அங்கிருந்து தப்பினார்.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

