/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை
/
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை
ADDED : ஜன 21, 2026 05:22 AM
ஆவடி: மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாய் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாபிராம், தண்டுரை, மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஹான் அலி, 61; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வஹிதா பானு, 51. இவர்களின் மூத்த மகன் சாகித், 23; சமையல் கலைஞர்.
இவர் நேற்று முன்தினம் இரவு, தன் தாய் வஹிதா பானுவிடம் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். அதை வஹிதா பானு கண்டித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வஹிதா பானு, வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு மயங்கி உள்ளார்.
சாகித் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு, மருத்துவ பரிசோதனையில் வஹிதா பானு இறந்தது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.