/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி
/
மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி
மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி
மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி
ADDED : ஜன 02, 2025 12:31 AM
குன்றத்துார், குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், எஸ்.கே.எஸ்., அவென்யூவை சேர்ந்தவர் முருகன், 56. அவரது மனைவி சிங்காரி, 52. நேற்று, ஆங்கில புத்தாண்டு என்பதால், மாலை, சிங்காரி தன் மகன் சிவராமனுடன் குன்றத்துார் சென்றார்.
குன்றத்துாரை அடுத்த கலெட்டிபேட்டை, அம்பேத்கர் சிலை அருகே, எதிரே வந்த குதிரை வண்டியில் இருந்து, அதிக சத்தம் வந்தததால், சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று, மிரண்டு ஓடி, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், தாயும், மகனும் துாக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிங்காரி, மகன் கண்ணெதிரே பரிதாபமாக இறந்தார்.
குதிரை வண்டியை ஓட்டிய சோமங்கலம், புதுப்பேடை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன், 41, என்பவரை பிடித்து குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.