/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரதட்சணை புகாரில் மாமியார், மருமகள் காவல்நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை
/
வரதட்சணை புகாரில் மாமியார், மருமகள் காவல்நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை
வரதட்சணை புகாரில் மாமியார், மருமகள் காவல்நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை
வரதட்சணை புகாரில் மாமியார், மருமகள் காவல்நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை
ADDED : ஆக 22, 2025 12:16 AM
பெரவள்ளூர், வரதட்சனை புகாரில் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது, குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட மாமியார், மருமகளை போலீசார் விலக்கிவிட்டனர்.
கொளத்துாரைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி, 58. இவரது மகன் ஹரிபாஸ்கர், அயர்லாந்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இணையதளம் மூலம், செங்கல்பட்டை சேர்ந்த திவ்யா என்பவருடன், 2021ம் ஆண்டு, இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் 2022ம் ஆண்டில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் கணவர், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டதாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஹரிபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர், வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த வழக்கில், இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து, கொளத்துார் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெமிலா ஷிர்லி விசாரித்தார்.
அப்போது இருதரப்பினரும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மாமியார் உமாமகேஸ்வரி, மருமகள் திவ்யா மற்றும் அவரது தாய் தேவி தலைமுடியை பிடித்து அடித்துக் கொண்டனர். சில நிமிடம் காவல்நிலையம் போர்களமானது. அவர்களை விலக்கிவிட்டு, போலீசார் எச்சரித்தனர்.
சண்டையில் உமாமகேஸ்வரி, திவ்யா உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தங்களை தாக்கியதாக இருதரப்பிலும் தனித்தனியே பெரவள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.