/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடைக்காரர் கொலை வழக்கு கொலையாளியின் தாய் கைது
/
கடைக்காரர் கொலை வழக்கு கொலையாளியின் தாய் கைது
ADDED : நவ 15, 2024 12:58 AM
அமைந்தகரை, அமைந்தகரை, ஆசாத் நகர், ராஜகோபாலன் தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 47. இவர், வீட்டிலேயே பிரியாணி செய்து, அதே பகுதியில் தள்ளுவண்டி கடையில் விற்று வந்தார்.
பிரியாணி பாத்திரங்களை கழுவும் நீர், எதிர் வீட்டில் வசிக்கும் முகமது முக்தார், 31 வீட்டின் அருகில் செல்வதால், அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது.
கடந்த 9ம் தேதி, தமீம் அன்சாரி, அவரது மனைவி கலைக்கா பானுவுடன், முகமது முக்தார், அவரது தாய் உள்ளிட்டோர் தகராறு செய்துள்ளனர்.
ஆத்திரமடைந்த முகமது முக்தர், வீட்டில் இருந்த கத்தியால், தமீம் அன்சாரியை குத்தி கொலை செய்தார். வழக்கில் முகமது முக்தாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலைக்கு உடந்தையாக இருந்த, முகமது முக்தாரின் தாயையும் கைது செய்ய வேண்டும் என, தமீம் அன்சாரி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைந்தகரை போலீசார் விசாரித்து, துாண்டுதலாக இருந்த, முகமது முக்தாரின் தாய் ரசியா பேகத்தை, 54, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.