/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 வயது குழந்தையிடம் அத்துமீறிய வாலிபரை 'நையப்புடைத்த' தாய்
/
3 வயது குழந்தையிடம் அத்துமீறிய வாலிபரை 'நையப்புடைத்த' தாய்
3 வயது குழந்தையிடம் அத்துமீறிய வாலிபரை 'நையப்புடைத்த' தாய்
3 வயது குழந்தையிடம் அத்துமீறிய வாலிபரை 'நையப்புடைத்த' தாய்
ADDED : ஆக 18, 2025 02:40 AM
திருவொற்றியூர்:மூன்று வயது குழந்தையிடம், பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட போதை வாலிபர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள தன் மாமியாரின் வீட்டிற்கு அப்பெண் சென்றிருந்தார்.
அந்நேரம், அவருடைய மூன்று வயது பெண் குழந்தை, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. மாமியார் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வந்து பார்த்த போது, குழந்தையிடம் மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடித்து, நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், பிடிபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன், 26, என்பதும், போதையில் குழந்தையிடம் அத்து மீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, திருவொற்றியூர் மகளிர் போலீசார், நேற்று அவரை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.