/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது
ADDED : அக் 30, 2025 03:56 AM
அண்ணா நகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாயின் இரண்டாவது கணவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அண்ணா நகர் காவல் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கணவர் பிரிந்த நிலையில், 36 வயதுடைய நபரை, இரண்டாவது திருமணம் செய்து, முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் வாழ்ந்து வருகிறேன். எனது, 15 வயது மகள், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
மகளின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அவரிடம் விசாரித்த போது, இரண்டாவது கணவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, அவர் அதை மறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
விசாரணையில், 36 வயது நபர், மகள் உறவு முறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, அவர் மீது 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

