/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டும், குழியுமான சுந்தரசோழபுரம் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
குண்டும், குழியுமான சுந்தரசோழபுரம் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
குண்டும், குழியுமான சுந்தரசோழபுரம் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
குண்டும், குழியுமான சுந்தரசோழபுரம் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 23, 2025 11:59 PM

திருவேற்காடு, திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பிரதான சாலை 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை ஒட்டி, சக்கரேஸ்வரி நகர், ஆர்.எஸ்.எம் நகர், ராம் நகர் பிரதான சாலை, எல்.கே.பி நகர், செல்வகணபதி நகர், கிரீன் பார்க் பிரதான சாலை, ஏ.எஸ்.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2,500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, அரசு, தனியார் பள்ளிகள், சிறு குறு வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சுந்தரசோழபுரம் பிரதான சாலை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது. தற்போது சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. ஆவடியில் இருந்து திருவேற்காடு சிவன் கோவில் மற்றும் கருமாரி அம்மன் கோவில் செல்வோர் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆறு ஆண்டுகளாகியும், புதிய சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், கட்டட கழிவு மற்றும் சிமென்ட் கலவை கொட்டி அடிக்கடி சமன் செய்யப்பட்டு வருகிறது. சாலையில் இருந்து வெளியேறும் புழுதி காற்றில் துாசி படியும் நிலை உள்ளது. இதனால், கோடை காலத்தில் கூட ஜன்னல் மற்றும் கதவு திறந்து வைக்க முடியாமல் பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகள் பலர் வேகத்தடை மற்றும் சாலையில் உள்ள பள்ளத்தில் அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மழைக்காலத்தில், பள்ளத்தில் மழைநீர் தேங்கி, சாலை படுமோசமாக மாறி வருகிறது. எனவே, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
****

