/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழுதி பறக்கும் படப்பை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
புழுதி பறக்கும் படப்பை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
புழுதி பறக்கும் படப்பை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
புழுதி பறக்கும் படப்பை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : நவ 02, 2024 12:34 AM

படப்பை, வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி ஆமை வேகத்தில் நடக்கிறது.
மந்த பணியால், படப்பை பஜார் பகுதியில் சாலை குறுகலாகி நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில் சாலை சேறும் சகதியுமாகவும், வெயில் அடிக்கும் போது, முன்னால் செல்லும் வாகனம் தெரியாத அளவிற்கு புழுதி மண்டலமாக மாறுகிறது.
இதனால், படப்பை பஜாரில் உள்ள வணிக கடைகள், வீடுகளில் புழுதி படிகிறது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதற்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.