/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கும்மிருட்டான பெரியார் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
கும்மிருட்டான பெரியார் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டான பெரியார் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டான பெரியார் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : பிப் 04, 2025 12:33 AM

ஆவடி அடுத்த பட்டாபிராம், பள்ளத்தெரு அருகில், பட்டாபிராம் - கருணாகரச்சேரி ஊராட்சி இணைக்கும், தந்தை பெரியார் சாலை உள்ளது.
இங்குள்ள ஐந்து குறுக்கு தெருக்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல மாதங்களாக மின் விளக்கு இல்லாமல் இச்சாலை கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இருபுறமும் செடி கொடிகள் வளர்ந்து, புதர்போல் காட்சியளிப்பதால், அரை கி.மீ., துாரமுள்ள இந்த சாலையை கடப்பதற்கு அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவில் அவ்வழியாக செல்லும் பெண்கள் 'மொபைல் டார்ச்' அடித்து பீதியுடன் நடந்து செல்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், சாலையில் மின் விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவா, ஆவடி.