/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையில் சின்னாபின்னமான டிரங் சாலை பூந்தமல்லியில் வாகன ஓட்டிகள் திணறல்

ADDED : டிச 03, 2025 05:41 AM

பூந்தமல்லி: தொடர்ந்து பெய்து வரும் மழையால், கற்கள் பெயர்ந்து டிரங் சாலை சின்னாபின்னமானது. இதனால், இச்சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சியின் பிரதான சாலையாக டிரங் சாலை உள்ளது. இந்த சாலையில், பேருந்து நிலையம், நீதிமன்றம், நகராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இரண்டு திரையரங்கங்கள், 1,000த்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.
இந்த சாலையில், தற்போது மெட்ரோ மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை, மழையால் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையம் அருகே, டிரங் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சின்னாபின்னமாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அதனால், சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.