/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேசின்பாலம் அருகே போக்குவரத்து மாற்றம் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
பேசின்பாலம் அருகே போக்குவரத்து மாற்றம் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
பேசின்பாலம் அருகே போக்குவரத்து மாற்றம் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
பேசின்பாலம் அருகே போக்குவரத்து மாற்றம் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 15, 2025 12:28 AM

சென்னை, பேசின்பாலம் அருகே, திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
வடசென்னையின் பிரதான சாலையாக ஜி.என்.டி., சாலை உள்ளது. மின்ட் சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா வரை இந்த சாலை அமைந்துள்ளது.
இச்சாலையில் பாரிமுனை, ராயபுரம், வண்ணாரபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்ட் சந்திப்பு வழியாகவும், மின்ட் மேம்பாலம் வழியாகவும் வரும் வாகனங்கள், பேசின்பாலம் செல்வதற்கு நேரடியாக அனுமதிக்கப்படுவது இல்லை.
வால்டாக்ஸ் சாலைக்குள் நுழைந்து, இடதுபுறம் திரும்பி பேசின்பாலத்தை அடைந்து புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.
ஆர்.கே.நகரில் இருந்து வரும் வாகனங்கள், வால்டாக்ஸ் சாலைக்கு செல்ல முடியாத அளவிற்கு பேசின்பாலத்தின் கீழே, பேரிகார்டு தடுப்புகளை போக்குவரத்து போலீசார் அமைத்திருந்தனர். கொரோனா காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பயன்பாட்டில் இருந்தது.
இந்நிலையில், வால்டாக்ஸ் சாலை - ஜி.என்.டி., சாலை - ஆர்.கே.நகர் செல்லும் சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் செய்துள்ளனர்.
திடீரென, நேற்று முன்தினம் அதை நடைமுறையும்படுத்தி உள்ளனர். இதனால், ஜி.என்.டி., சாலை, வால்டாக்ஸ் சாலை, ஆர்.கே.நகர் சாலைகளில் காலை முதலே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் திணறுகின்றனர்.
இதனால், ஸ்டாலின் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை, சென்னை மாநகராட்சி, சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும், நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
வாகன நெரிசலை தீர்க்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.