நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள் அவதி
UPDATED : அக் 13, 2026 05:26 PM
ADDED : அக் 13, 2026 05:24 PM

அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
குன்றத்துார்—ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் புதுப்பேடு பகுதியில் சாலையோரம் பிளாஸ்டிக், உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. குப்பையில் உள்ள இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகளை உண்பதற்காக வரும் மாடுகள், நாய்கள் சண்டையிட்டு நெடுஞ்சாலையில் திடீரென நுழைகிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனேவ நெடுஞ்சாலையில் குப்பை கொட்டுவதை, கண்காணித்து அதிகாரிகள் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
