/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமற்ற 'பேஜ் ஒர்க்கால்' வாகன ஓட்டிகள் அவதி
/
தரமற்ற 'பேஜ் ஒர்க்கால்' வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 02, 2025 03:15 AM

அண்ணா நகர்:அண்ணா நகர் கிழக்கு, வ.உ.சி. நகர் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இச்சாலையின் நடுவில் சில மாதங்களுக்கு முன், குடிநீர் வாரிய பணிகள் நடந்தன.
அதன்பின் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டு, சாலையின் நடுவே 'பேஜ் ஒர்க்' செய்யப்பட்டது. தற்போது, 'பேஜ் ஒர்க்' செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் செல்வதால், மீண்டும் பள்ளம் ஏற்பட்டு, சாலை பல்லாங்குழியாக மாறியது. தரமற்ற வகையில் 'பேஜ் ஒர்க்' செய்தாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.