/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் நீர் வெளியேற்றம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
/
சாலையில் நீர் வெளியேற்றம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
சாலையில் நீர் வெளியேற்றம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
சாலையில் நீர் வெளியேற்றம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
ADDED : ஜன 06, 2024 12:10 AM

வளசரவாக்கம்,மெட்ரோ ரயில் பணியின் போது சாலையில் விடப்படும் தண்ணீரால், ஆற்காடு சாலை வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கும் நிலை உள்ளது.
போரூர் - - கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக ஆற்காடு சாலை உள்ளது. இச்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
சாலை நடுவே தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆற்காடு சாலை காரம்பாக்கம் அருகே குளம் போல் தேங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து தண்ணீரை சாலையில் வெளியேற்றி வருவதால், ஆற்காடு சாலை குண்டும் குழியுமானதுடன், சேறும் சகதியமாக உள்ளது.
இதனால், அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். சில தினங்களுக்கு முன் ஒரே இடத்தில் ஏழு பேர் பைக்கில் இருந்து வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
தற்போது, வளசரவாக்கம் மருத்துவமனை சாலை அருகே ஆற்காடு சாலையிலும், மெட்ரோ ரயில் பணி இடத்தில் இருந்து தண்ணீர் விடப்படுகிறது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர்.