/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட முடிவு
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட முடிவு
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட முடிவு
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட முடிவு
ADDED : செப் 26, 2025 11:41 PM
திருவொற்றியூர், மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணம் கோரி, எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், 16வது நாளை எட்டியுள்ளது. அடுத்தகட்டமாக இன்று, தங்கள் குடும்பத்துடன் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் போராட முடிவு செய்துள்ளனர்.
திருவொற்றியூர், விம்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எப்., தொழிற்சாலை நிர்வாகம், ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணம் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதை எதிர்த்து, தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், நேற்று 16வது நாளை எட்டியுள்ளது. நேற்று மதியம், போராட்டத்திற்கு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நேரில் ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையில், 16 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், நிறுவன வாயில் அருகேயே உணவு சாப்பிட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக, இன்று மாலை 3:00 மணிக்கு, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் போராடுவது என முடிவெடுத்துள்ளனர்.