/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குத்தம்பாக்கத்தில் இருந்து 150 பஸ்கள் வழித்தட பட்டியல் தயாரித்தது எம்.டி.சி.,
/
குத்தம்பாக்கத்தில் இருந்து 150 பஸ்கள் வழித்தட பட்டியல் தயாரித்தது எம்.டி.சி.,
குத்தம்பாக்கத்தில் இருந்து 150 பஸ்கள் வழித்தட பட்டியல் தயாரித்தது எம்.டி.சி.,
குத்தம்பாக்கத்தில் இருந்து 150 பஸ்கள் வழித்தட பட்டியல் தயாரித்தது எம்.டி.சி.,
ADDED : ஜன 25, 2025 12:33 AM
சென்னை, குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, 150 மாநகர பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் பட்டியல் தயாரித்துள்ளது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில், 400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதால், வரும் மார்ச் மாதத்தில், பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் ஏற்படும் நெரிசலை குறைக்க, பல்வேறு இடங்களில் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தை தொடர்ந்து, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கிருந்து வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணியர் தேவைக்கு ஏற்ப, வெளியூர் பஸ்கள் இயக்கப்படும். இங்கிருந்து சென்னையின் மற்ற இடங்களை இணைக்கும் வகையில், 150 மாநகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.
இதற்காக வழித்தட பட்டியலை தயாரித்து உள்ளோம். குறிப்பாக, கிளாம்பாக்கம், தி.நகர், பிராட்வே, தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருவான்மியூர், கோயம்பேடு, மாதவரம், கடற்கரை உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் இடம் பெறும்.
பூந்தமல்லியில் இருந்து தற்போது இயக்கப்படும் பேருந்துகளில், 70 சதவீதம்; போரூரில் இருந்து இயக்கப்படுவதில், சில பேருந்துகளும், குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
இதுதவிர, பைபாஸ் சாலை வழியாக கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சில புதிய வழித்தடங்களிலும், மாநகர பேருந்துகள் இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.