/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 புது பஸ் பணிமனைகளுக்கு 'டெண்டர்' வெளியிட்டது எம்.டி.சி.,
/
6 புது பஸ் பணிமனைகளுக்கு 'டெண்டர்' வெளியிட்டது எம்.டி.சி.,
6 புது பஸ் பணிமனைகளுக்கு 'டெண்டர்' வெளியிட்டது எம்.டி.சி.,
6 புது பஸ் பணிமனைகளுக்கு 'டெண்டர்' வெளியிட்டது எம்.டி.சி.,
ADDED : டிச 09, 2025 05:11 AM
சென்னை: மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஆறு புது பேருந்து பணிமனைகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், தற்போது 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,488 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சாதாரண கட்டண பேருந்துகள் - 1,559, விரைவு மற்றும் சொகுசு - 1674, 'ஏ.சி' - 48, சிறிய பஸ்கள் - 207 இயக்கப்படுகின்றன.
தினமும் 34 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையின் எல்லை நாளுக்குள் நாள் விரிவடைந்து வரும் நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கூடுதலாக ஆறு இடங்களில் பணிமனை அமைக்கவும், டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
வரும் 2030ல் மாநகர பேருந்துகளின் தேவை, 7,000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக, தரமணி, திருவள்ளூர், தையூர், மாமண்டூர், வரதராஜபுரம், ஆட்டன்தாங்கல் ஆகிய ஆறு இடங்களில், புதிய பணிமனைகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
டெண்டர் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்து, விரைவில் பணிகள் துவங்கப்படும்.
மேலும், பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் மின்சார பேருந்துகளுக்கான தனி பணிமனை அமைக்கப்படும்.
அதேபோல், ஆலந்துார், ஆவடி, அய்யப்பன்தாங்கல், பாடியநல்லுார், பெரம்பூரில் தற்போதுள்ள டீசல் பணி மனைகளோடு, மின்சார பேருந்துகளுக்கான தனி பணி மனைகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

