/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சிங்கார அட்டை' விற்பனை அதிகரிக்க தனியாருடன் எம்.டி.சி., கைகோர்ப்பு
/
'சிங்கார அட்டை' விற்பனை அதிகரிக்க தனியாருடன் எம்.டி.சி., கைகோர்ப்பு
'சிங்கார அட்டை' விற்பனை அதிகரிக்க தனியாருடன் எம்.டி.சி., கைகோர்ப்பு
'சிங்கார அட்டை' விற்பனை அதிகரிக்க தனியாருடன் எம்.டி.சி., கைகோர்ப்பு
ADDED : மே 10, 2025 12:29 AM
சென்னை, 'சிங்கார சென்னை அட்டை' விற்பனையை அதிகரிக்க, தனியாருடன் மாநகர போக்குவரத்து கழகம் இணைந்துள்ளது.
மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், 2023ல் 'சிங்கார சென்னை அட்டை' அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்தும் திட்டம், கடந்த ஜன., 6 முதல் துவக்கப்பட்டது.
சென்னையின் முக்கிய பணிமனை, பேருந்து நிலையங்களில் சிங்கார சென்னை பயண அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த அட்டை விற்பனை நேரத்தை அதிகரிக்க, தனியாருடன் மாநகர் போக்குவரத்து கழகம் இணைந்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சிங்கார சென்னை அட்டை பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே அட்டையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது. சில்லரை பிரச்னை, டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்கும் பிரச்னைக்கு தீர்வாகவும் அமைந்துள்ளது.
இதனால், தினமும் 1000க்கும் மேற்பட்டோர் புதியதாக அட்டை வாங்குகின்றனர். இந்த அட்டைகள் பயணியருக்கு தடையின்றி கிடைக்க, தனியாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
ஏற்கனவே, 'ஏர்டெல்' நிறுவனத்துடன் இணைந்துள்ளோம். இதன்வாயிலாக, பயணியர் தேவையான அளவுக்கு அட்டையின் மதிப்பை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும், அந்த நிறுவனம் சார்பில் முக்கிய பேருந்து நிலையங்களில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பயணியருக்கு நேரடியாக அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல், பல்வேறு தனியார் வங்கிகளின் கிளைகளிலும், இந்த அட்டைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

