/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலையில் மண் குவியல் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையில் மண் குவியல் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் மண் குவியல் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் மண் குவியல் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 18, 2025 03:13 AM

திருவேற்காடு:திருவேற்காடு - மதுரவாயல் நெடுஞ்சாலையில், மண் குவியலை அகற்றாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருவேற்காடு முதல் மதுரவாயல் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, சாலையோரத்தில் மணல் குவிந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிக்காததால், குப்பையும் சேர்ந்துள்ளது.
இதனால், கனரக வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது, புழுதி மண்டலமாக மாறி இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை துாசுகள் பதம்பார்க்கிறது.
குறிப்பாக, திருவேற்காடு, வேலப்பன்சாவடியில், சாலையோரத்தில் அதிக அளவில் மண் குவிந்துள்ளது. மழைக்காலத்தில் சகதியாக மாறி, வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை ஓரங்களில் குவிந்துள்ள மண்ணை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.