/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதலியார்குப்பம் முகத்துவாரத்தில் கட்டப்படும் சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு
/
முதலியார்குப்பம் முகத்துவாரத்தில் கட்டப்படும் சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு
முதலியார்குப்பம் முகத்துவாரத்தில் கட்டப்படும் சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு
முதலியார்குப்பம் முகத்துவாரத்தில் கட்டப்படும் சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு
ADDED : பிப் 07, 2024 12:58 AM
சென்னை, 'சென்னை - புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை முதலியார்குப்பம் முகத்துவாரம் அருகில், கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அனுமதி பெறாமல், சுற்றுலா வளர்ச்சி கழகம், கழிப்பறைகள், குடில்கள், கான்கிரீட் துாண்கள், சுற்றுச்சுவர்களை கட்டுகிறது.
இந்த சட்ட விரோதமான கட்டுமானங்களை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'சுற்றுலா வளர்ச்சி கழகம், தமிழக கடலோர மேலாண்மை ஆணையம், செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'வருவாய் துறையும், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்தபோது, முதலியார்குப்பம், பரமன்கேணி கிராமங்களில், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதன் மீது அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பது குறித்து, அரசின் அறிக்கையில் எதுவும் இல்லை. சி.ஆர்.இசட்., அறிவிப்பை மீறி கட்டுமானங்கள் நடப்பது கண்டறியப்பட்டால், தொடர்ந்து நடக்கும் சட்ட விரோத கட்டுமானங்களை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் மார்ச் 4ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

