ADDED : பிப் 07, 2024 12:07 AM
அ நிறம் | அளவு
திருவான்மியூர்: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கந்தகுமார், 27. கடந்த 2018ம் ஆண்டு, திருவான்மியூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நபர்களால், வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவான்மியூர் போலீசார், அந்தோணி, 24, என்பரை கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த இவர், தலைமறைவானார்.
கடந்த ஆண்டு அக்., மாதம் பிடியாணை பிறப்பித்ததால், நவ., மாதம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. மீண்டும் தலைமறைவானதால், கடந்த 1ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நேற்று இவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
