ADDED : செப் 13, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகம் எதிரே, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி, வி.சி., கட்சியினர் இடையே ரகளை ஏற்பட்டது. அப்போது, மூர்த்தி பிளேடால் கிழித்ததால், திலீபன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, மெரினா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மூர்த்தி நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாகத்தான், அவருக்கும், வி.சி., கட்சியினருக்கும் தராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மூர்த்தியை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, சென்னை எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.