/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அருங்காட்சியக கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
/
அருங்காட்சியக கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
அருங்காட்சியக கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
அருங்காட்சியக கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
ADDED : நவ 17, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில், கலையரங்கம் உள்ளது. இங்கு, விடுமுறை தினமான நேற்று, தனியார் நடன அகாடமியினர் சார்பில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியின் போது, கலையரங்க கட்டடத்தின் ஆண்கள் கழிப்பறை நுழைவு வாயில் மேல்புறம் உள்ள, சுவரின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
அந்நேரத்தில் நல்வாய்ப்பாக கழிப்பறையில் இருந்து வெளியே வந்த, குழந்தை மற்றும் பெற்றோரின் மேல் விழவில்லை. வினாடி பொழுதில் அவர்கள் உயிர் தப்பினர். அங்கிருந்தோர் பதற்றத்துடன் வெளியேறினர். இதனால் அங்கு, சற்று பரபரப்பு நிலவியது.