ADDED : ஏப் 29, 2026 02:53 AM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இசையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 20 வயது கல்லுாரி மாணவி. இவர், நேற்று திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் அருகில் உள்ள மருந்து கடைக்கு, தலைவலி மாத்திரை வாங்க சென்றார்.
அப்போது பைக்கில் வந்த நபர், கல்லுாரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, காலடிப்பேட்டை, மேட்டு தெருவைச் சேர்ந்த இசையாசிரியர் பீட்டர், 30 என்பவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
