ADDED : ஏப் 26, 2026 10:26 PM

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின், கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இ.சி.ஆர்., பாலவாக்கத்தில் வசிக்கிறார். இவர், தி.மு.க.,வை ஆதரித்தும், த.வெ.க.,வை விமர்சித்தும், சமூக வலைதளங்களில் பேசி வந்தார்.
இவர் நேற்று மதியம், ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். திரும்பி வரும்போது, காரின் பின் இருக்கை இடது பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்த வீடியோவை 'பேஸ்புக்'கில் பதிவேற்றம் செய்து, 'தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று நான் ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றபோது நடந்தது' என குறிப்பிட்டுள்ளார்.
நீலாங்கரை போலீசாரிடம் கேட்டபோது, 'எந்த இடத்தில் வைத்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டது என பதிவிடவில்லை. அவர் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
