/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்மிக சொற்பொழிவு மாநாடு கும்மிடியில் குவிந்த முஸ்லிம்கள்
/
ஆன்மிக சொற்பொழிவு மாநாடு கும்மிடியில் குவிந்த முஸ்லிம்கள்
ஆன்மிக சொற்பொழிவு மாநாடு கும்மிடியில் குவிந்த முஸ்லிம்கள்
ஆன்மிக சொற்பொழிவு மாநாடு கும்மிடியில் குவிந்த முஸ்லிம்கள்
ADDED : பிப் 18, 2024 12:06 AM
கும்மிடிப்பூண்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாத் அமைப்புகள் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே கும்புளி கிராமத்தில், ஆன்மிக சொற்பொழிவு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான திறந்தவெளி இடத்தில், பிரமாண்ட பந்தல் அமைத்து, நேற்று மாநாடு துவங்கியது. இன்றும் நடக்கிறது.
இந்த மாநாட்டிற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, 250 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்றைய மாநாட்டில், 20,000 ஆண்கள் பங்கேற்றனர். உணவு, குடிநீர், மருத்துவம், தங்கும் இடம், வாகன நிறுத்தம், கழிப்பறைகள் என, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியா சக்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.