/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூரில் தனி ஆட்டுத்தொட்டி ஆட்டிறைச்சி வியாபாரிகள் கோரிக்கை

ADDED : நவ 17, 2024 12:14 AM
திருவொற்றியூர்வ
'திருவொற்றியூரில், தனி ஆட்டுத்தொட்டி அமைக்க வேண்டும்' என, வடசென்னை ஆட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் கரிமுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள், மண்டலக் குழு தலைவர் தனியரசை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
பின், கரிமுல்லா அளித்த பேட்டி:
புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டியில் போய், ஆடுஅறுக்க சொல்கின்றனர். அங்கு எங்களுக்கு இடம் இல்லை. இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால்தான் இடம் தருவோம் என்கின்றனர். இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
நாங்கள் கடைகளில் சுகாதாரமான முறையில்தான் ஆடுகளை அறுத்து விற்கிறோம். எங்களுக்கு, மாநாகராட்சி சுகாதாரத் துறையினர், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் சிரமமாக உள்ளது.
எங்களுக்கு, திருவொற்றியூரில் தனி ஆட்டுத்தொட்டி வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிடில், வீதிகளில் இறங்கிப் போராடவும் நாங்கள் தயார்.
இவ்வாறு, அவர் கூறினார்.