/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மயிலாப்பூர் திருவிழா ஜன., 8ல் துவக்கம்
/
மயிலாப்பூர் திருவிழா ஜன., 8ல் துவக்கம்
ADDED : ஜன 03, 2026 05:56 AM
சென்னை: 'மயிலாப்பூர் திருவிழா'- வரும் 8ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதற்கான டி-ஷர்ட் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க உள்ள துணிப் பைகளை, சுந்தரம் நிதி நிறுவன இயக்குநர் ராஜிவ்லோசன், நிகழ்ச்சி இயக்குநர் வின்சன்ட்டி சூசா ஆகியோர், நேற்று வெளியிட்டனர்.
பின், வின்சன்ட்டிசூசா அளித்த பேட்டி:
சுந்தரம் நிதி நிறுவனத்தின் 22வது மயிலாப்பூர் திருவிழா, வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள, மாட வீதிகளில் நடனம், இசை, நாட்டுப்புற கலைகள், கோலப் போட்டிகள், சதுரங்கம் உட்பட, பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன.
எட்டு பாரம்பரிய நடை பயணங்கள், குழந்தைகளுக்கான சைக்கிள் பயணம் உள்ளிட்டவை நடக்க உள்ளன.
மயிலாப்பூரின் கலாசாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த தனிநபர் அல்லது அமைப்புக்கு, 'ஸ்பிரிட் ஆப் மயிலாப்பூர்' என்ற சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு, 10,000 துணிப்பைகள் வழங்கபட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

