ADDED : டிச 03, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ், 25; கார்பென்டர். இவரது மனைவி குஷ்பு ஷர்மா. இவர்களுக்கு 4 வயதில் மகள் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு நேற்று தாய் பால் கொடுத்து விட்டு உறங்க வைத்த நிலையில், நேற்று இரவு 7:30 மணியளவில் அசைவு இன்றி கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.