/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைன் மோசடி பெண்ணிடம் ரூ.96,000 'அபேஸ்' செய்த மர்ம நபர்
/
ஆன்லைன் மோசடி பெண்ணிடம் ரூ.96,000 'அபேஸ்' செய்த மர்ம நபர்
ஆன்லைன் மோசடி பெண்ணிடம் ரூ.96,000 'அபேஸ்' செய்த மர்ம நபர்
ஆன்லைன் மோசடி பெண்ணிடம் ரூ.96,000 'அபேஸ்' செய்த மர்ம நபர்
ADDED : ஜூன் 03, 2025 12:22 AM
பெருங்களத்துார், பெருங்களத்துார் அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் முத்துமீனா, 26. இரு வாரங்களுக்கு முன், ஆன்லைனில் அழகு சாதனப் பொருட்களை ஆர்டர் செய்தார்.
கடந்த மே 30ம் தேதி, முத்துமீனாவின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், ஆர்டர் செய்த பொருள், கிடங்கில் சிக்கியதாகவும், அதனால் மறு ஆர்டர் செய்ய 12,000 ரூபாயை அனுப்பும்படியும் கேட்டுள்ளார்.
செலுத்தப்படும் பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய முத்துமீனா, மீண்டும் பணத்தை அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, ஆர்டர் செய்த பொருள் வேண்டுமென்றால், ஓ.டி.பி., மற்றும் ஐ.எப்.எஸ்.சி., எண்ணை அனுப்புங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து முத்துமீனா, தன் வங்கி கணக்கின் ஐ.எப்.எஸ்.சி., எண்ணை, தன் மொபைல் போனுக்கு அனுப்பிய லிங்கில் பதிவு செய்தபோது, முத்துமீனாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து, 84,000 ரூபாயை, மர்ம நபர் திருடியது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துமீனா, இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, நுாதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து, விசாரித்து வருகின்றனர்.