/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாகர்கோவில் 'வந்தே பாரத்' கூடுதல் பெட்டி இணைப்பு
/
நாகர்கோவில் 'வந்தே பாரத்' கூடுதல் பெட்டி இணைப்பு
ADDED : மே 02, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில், வரும் 8ம் தேதி முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
எழும்பூர் -- நாகர்கோவில் இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை, கடந்தாண்டு ஆக., 31ம் தேதி துவக்கப்பட்டது. தற்போது, 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பயணியர் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, பயணியர் வசதியை கருத்தில் வைத்து, எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் இரு மார்க்கத்திலும் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைத்து, 20 பெட்டிகளாக, வரும் 8ம் தேதி முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.

