/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாராயணா கல்வி குழுமம் பிரசார இயக்கம் துவக்கம்
/
நாராயணா கல்வி குழுமம் பிரசார இயக்கம் துவக்கம்
ADDED : பிப் 23, 2024 12:06 AM
சென்னை, 'உங்கள் கனவுகள், எங்கள் கனவுகள்' என்ற, விழிப்புணர்வு பிரசாரத்தை, நாராயணா கல்வி குழுமம் துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, நாராயணா கல்வி குழும இயக்குனர்கள் சிந்துாரா, ஷாரணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
ஆந்திரா, தெலுங்கானாவில், 45 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளை நடத்தி வந்த நாராயணா கல்விக் குழுமம், இப்போது, 23 மாநிலங்களின் 230 நகரங்களில், 800க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இவற்றில், 50,000க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் ஆற்றல் மிக்க கற்றல் மையங்களாக, நாராயணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கற்பித்தல் என்பதைத் தாண்டி, எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களும், நாராயணா கல்வி நிறுவனங்களில் கிடைக்கும்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கு உள்ளேயும் பரந்த, பெரும்பாலும் பயன்படுத்தப்படாத திறன் உள்ளது. அந்த திறமையை வெளிக்கொண்டுவர, 'உங்கள் கனவுகள், எங்கள் கனவுகள்' என்ற ஊக்கமளிக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்கி உள்ளோம்.
இன்றைய மாணவர்களின் கனவுகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறது. அதன் அடிப்படையில், நாளைய தலைவர்களை உருவாக்க, அனைத்து டிஜிட்டல் வழிகளிலும் இந்த பிரசாரத்தை துவக்கி உள்ளோம். எங்களின் இந்தப் பயணத்தில் அனைவரும் கைகோர்த்து, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.