/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் நாராயணீயம் பாராயணம்
/
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் நாராயணீயம் பாராயணம்
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் நாராயணீயம் பாராயணம்
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் நாராயணீயம் பாராயணம்
ADDED : அக் 06, 2025 03:08 AM
சேலையூர்: சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்த நவராத்திரி மகோத்சவத்தில், கடைசி நாளான நேற்று, 700க்கும் மேற்பட்டோர் நாராயணீயம் பாராயணம் செய்தனர்.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்சவத்தை நடத்தி வந்தனர்.
இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மயிலாப்பூர் கற்பகாம்பாளுக்கு மூக்குத்தி சமர்ப்பணம் செய்தார். தொடர்ந்து, கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
கற்பகாம்பாள் கோவிலில் முதன் முதலாக, காஞ்சி மஹா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் துவங்கப்பட்ட பிடி அரிசி திட்டம் குறித்து பேசினார்.
முன்னதாக, ராஜகீழ்ப்பாக்கம் காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், நேற்று காலை, 700க்கும் மேற்பட்டோர் நாராயணீயம் பாராயணம் செய்தனர்.