/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்டிக்கடையில் ரகளை போதை ஆசாமி கைது
/
பெட்டிக்கடையில் ரகளை போதை ஆசாமி கைது
ADDED : அக் 19, 2024 12:17 AM
ஓட்டேரி, ஓட்டேரி, ஸ்ட்ரான்ஸ் சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் நவ்ஷாத், 36. அருகில், முட்டை விற்பனை கடையை, டேனியல், 30, என்பவர் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பெட்டிக்கடைக்கு மது போதையில் வந்த ஒருவர், கேரளா சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளார்.
குறிப்பிட்ட சிகரெட் இல்லாததால், கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை, போதை ஆசாமி உடைத்து ரகளை செய்துள்ளார். இதை, முட்டை கடை உரிமையாளர் டேனியல் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, முட்டை கடையில் இருந்து இரண்டு அட்டை முட்டைகளை எடுத்து வீதியில் துாக்கி விசியதோடு, இது குறித்து போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என, மிரட்டி சென்றுள்ளார். இது குறித்த புகாரை பெற்ற போலீசார், ஓட்டேரி, தாசமகான் சாலை பகுதியைச் சேர்ந்த இர்பான், 21, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

