ADDED : அக் 08, 2024 12:16 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சி 20வது வார்டில், பட்டாபிராம், தென்றல் நகர் அமைந்துள்ளது. கடந்த 2022ல், தென்றல் நகரில் 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது.
தென்றல் நகர் 16, 14, 13, 10 ஆகிய தெருக்களில், 1.5 கி.மீ., துாரம், 5 அடி ஆழத்திற்கு முறையற்ற வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
வடிகாலில் பாயும் மழைநீர் வெளியேற வழியின்றி, பல மாதங்களாக கழிவுநீர் போல சாலையில் தேங்கி நிற்கிறது. திட்டமிடலின்றி தான்தோன்றி முறையில் ஒப்பந்ததாரரால் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். இதனால், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்றல் நகர் 14வது தெரு அருகே, கடந்த ஓராண்டாக வடிகால் நிரம்பி கழிவு நீர் சாலையில் வழிந்தோடி தேங்குகிறது.
இதனால், பகுதிவாசிகள் சுகாதார சீர்கேடில் சிக்கி தவிக்கின்றனர்.
