ADDED : அக் 21, 2024 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:இந்திய பேட்மின்டன் சங்கம், தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், 36வது சப் - ஜூனியர் தேசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டு, திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் நேற்று துவங்கியது.
வரும் 25ம் தேதி வரை, 15, 17 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
தமிழகம், கேரளா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, 800 வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
இப்போட்டியை, தமிழ்நாடு பேட்மின்டன் சங்க தலைவரும், பா.ம.க., தலைவருமான அன்புமனி துவக்கி வைத்தார்.

