/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய குத்துச்சண்டை: திருவொற்றியூர் மாணவர்கள் அசத்தல்
/
தேசிய குத்துச்சண்டை: திருவொற்றியூர் மாணவர்கள் அசத்தல்
தேசிய குத்துச்சண்டை: திருவொற்றியூர் மாணவர்கள் அசத்தல்
தேசிய குத்துச்சண்டை: திருவொற்றியூர் மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 19, 2025 12:28 AM

திருவொற்றியூர், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ - மாணவியர் இடையே, நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், திருவொற்றியூரை சேர்ந்த மூன்று மாணவர்கள், வெண்கல பதக்கம் வென்று அசத்தினர்.
மாநில அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ - மாணவியர் இடையேயான குத்துச்சண்டை போட்டிகள், ஜூலை 24 - 27ம் தேதிகளில், செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடந்தன.
இதில், 19 வயதுக்குட் பட்ட, 46 - 48 கிலோ எடை பிரிவினருக்கான குத்துச்சண்டை போட்டியில், திருவொற்றியூர் வேலம்மாள் நியூ ஜென் பள்ளியின், பிளஸ் 2 மாணவர் என்.யுவராஜ், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதேபோல், 17 வயதுக்குட்பட்ட, 52 - 54 கிலோ எடை பிரிவினருக்கான குத்துச் சண்டை போட்டியில், திருத்தங்கல் நாடார் பள்ளி, பிளஸ் 1 மாணவர் பி.பூபேஷ், தங்கம் வென்றார். இதில், 46 - 48 கிலோ எடை பிரிவில், அதே பள்ளியைச் சேர்ந்த எம்.ஜோகேஸ்வர் தங்கம் வென்றார்.
வெள்ளி, தங்கம் வென்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். அதன்படி, மூவரும், செப்., 11 - 15 வரை, ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
இதில், 18 மாநிலங்கள், ஆறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த யுவராஜ், பூபேஷ், ஜோகேஸ்வர் ஆகிய மூவரும், அவர்களுக்குரிய பிரிவுகளில் வெண்கலம் வென்று அசத்தினர்.