/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய குதிரை படை போட்டி சென்னை போலீசார் அசத்தல்
/
தேசிய குதிரை படை போட்டி சென்னை போலீசார் அசத்தல்
ADDED : மார் 07, 2026 05:48 AM

சென்னை: தேசிய அளவில் போலீசாருக்கான 44வது குதிரைப்படை போட்டி, மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சியகத்தில் நடந்தது.
கடந்த 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்த இப்போட்டியில், தமிழக போலீசார் 2 தங்க பதக்கம் உட்பட ஏழு பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
இதில், சென்னை காவல் குதிரைப்படையைச் சேர்ந்த ஆண், பெண் போலீசார், குதிரை பராமரிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, 1 தங்கம், 5 வெண்கலம் என, ஏழு பதக்கங்கள் மற்றும் இரண்டு கோப்பைகளை பெற்று, தமிழகம் மற்றும் சென்னை காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை படைத்த சென்னை காவல் குதிரைப்படையினருக்கு, கமிஷனர் அருண் நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.

