/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய ரேங்கிங் நீச்சல்: 400 வீரர்கள் பங்கேற்பு
/
தேசிய ரேங்கிங் நீச்சல்: 400 வீரர்கள் பங்கேற்பு
ADDED : டிச 15, 2025 05:31 AM

சென்னை: தேசிய ரேங்கிங் நீச்சல் போட்டியில், 400 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றனர்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டுத்துறை இயக்குநரகம் சார்பில், மாதந்தோறும் இரண்டாவது வாரத்தில் தேசிய ரேங்கிங் நீச்சல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கல்லுாரி மற்றும் பள்ளி பிரிவுகளில், மொத்தம் 400 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். சிறப்பு பிரிவான 50 மீ., ப்ரிஸ்டைலில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பங்கேற்று அசத்தினர்.
ஜூனியர் பிரிவில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவருக்கான 800 மீ., ப்ரிஸ்டைல் பிரிவில், வேல்ஸ் பள்ளியின் மாணவன் ஜி.ஆர்.கிருத்திக் வைபவ், போட்டியின் துாரத்தை 11.24.41 வினாடியில் கடந்து, முதலிடம் பிடித்தார். மாணவியர் பிரிவில், ஜகன்நாத் வித்யாலாவின் லயா ரகு, 12.47.30 வினாடியில் கடந்து முதலிடம் கைப்பற்றினார்.
கல்லுாரி பிரிவில், 800 மீ., ப்ரீஸ்டைலில் மாணவரில் எஸ்.ஆர்.எம்., வீரர் மோனிஷ் குமார் 10.51.71 வினாடியிலும், மாணவியரில் எஸ்.ஆர்.எம்., வீராங்கனை பவித்ரா ஸ்ரீ, 12.07.40 வினாடியில் கடந்து முதலிடங்களை வென்றனர்.
கல்லுாரி மாணவியர் 100 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பவித்ரா ஸ்ரீ, 1.23.97 வினாடியிலும்; மாணவரில், எஸ்.ஆர்.எம்., வீரர் ஜெயசூர்யா 1.12.15 வினாடியிலும் கடந்து முதலிடம் பிடித்தனர். அதேபோல, 100 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் சூப்பர் சீனியர் பிரிவு ஆண்களில் யோகித்ராஜ்; 9 - 10ம் வகுப்பு மாணவர் பிரிவில், அனித் மெத்தடிஸ்ட் பள்ளியின் ஷீசாந்த்; 6 - 8ம் வகுப்பு ஜூனியரில், மாதவரம் வேலம்மாள் பள்ளியின் மாணவி மிருத்திகா ஸ்ரீ முதலிடம் பிடித்து அசத்தினர்.

